சமீப காலமாக நமது நாட்டின் நமது பாரம்பரிய உணவுப் பொருட்களின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் கூட ஆரோக்கியம் தான் முக்கியம் என்ற மனநிலைக்கு மக்கள் தற்போது மாறி வருகின்றனர். அந்த வகையில் நமது பாரம்பரிய அரிசி மற்றும் சிறு தானியங்களைக் கொண்டு உலக தரத்தின் பிஸ்கட்டுகளை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த உழவன் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சாலை வடமலை அவர்களுடன் ஒரு நேர்காணல்.
- குடும்பம் மற்றும் சொந்த ஊர் பற்றி கூறுங்கள்
சொந்த ஊர் திருத்தணி அருகே அருங்குளம் என்னும் கிராமம். தந்தை திரு. மணி அவர்கள் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அம்மா சாலை பட்டம்மாள் விவசாயம் செய்து வந்தார். நாங்கள் மெய்வழிச் சாலை சன்மார்க்த்தில் இருப்பதால் எங்கள் பெயருடன் சாலை பெயரைச் சேர்த்துள்ளோம். திருத்தணியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன அவர்கள் பயின்ற பள்ளியில்ல் படித்தேன். பின்னர் ஒருவருடம் ஓசுரில் உள்ள டி.வி.எஸ் மோட்டார் கம்பெனியில் வேலை பார்தேன். திருத்தணி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ள்மோ எலக்ட்டரானிக்ஸ் படித்து சென்னயில் உள்ள லூகாஸ் டி.வி.எஸ். நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஜினியரிராக வேலை பார்த்தேன். டாடா நிறுவனத்தின் நானோ காருக்கான உதிரிபாகங்கள் வடிவமைப்புக் குழுவில் நானும் ஒருவராக இருந்தேன்.
எனக்கு இளம் வயதில் இருந்து விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தால் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்போதுய் சாலை வேலன் அவர்களின் வெளிச்சம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வந்தேன். அப்பணிகள் முடிந்த பின் வருமாணம் குறித்து யோசனை செய்து விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தலாம் என எண்ணி, சிறுதானியப்பொருட்களை உணவு கண்காட்சிகளில் ஸ்டால் அமைத்து சென்னை, கோவை, போன்ற பெருநகரங்களில் சந்தைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டேன். விவசாயிகளிடம் சிறுதானியப் பொருட்களை வாங்கி அவற்றை கடைகளில் விற்பனை செய்து வந்தேன்.
அப்பொது சிறுதானிய இயற்கை உணவுத் திருவிழாக்களை நடத்தி வந்தோம். சென்னையில் பணியாற்றும் போதே அம்பத்தூரில் சொந்தமாக நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற இலட்சியம் இருந்தது. சுமார் 200 நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்தேன். நான் டூ அன் டை மேக்கிங்கில் தேர்ச்சி பெற்றவன். இதனால் இயற்கை விவசாயம் தயாரிக்கப்படும் உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு தொடங்கி சேமியா தயாரித்து சந்தைப்படுத்தினேன். அதில் நஷ்டம் ஏற்பட்டது.
பின்னர் சிறுதொழில் தொடங்குவதற்கான கடனுதவி பெறுவதற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் துறையில் அதிகாரிகள் எனது முயற்சிக்கு ஊக்கப்படுத்தியதுடன், மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறுதொழில் அதிபர்கள் நலச்சங்கம் ஆலோசனை வழங்கியது. NEEDS என்ற திட்டத்தில் கடனுதவியும் கிடைத்தது. மைதாவில் மட்டுமே பிஸ்கட் செய்து வந்த நிலையில் நம் பாரம்பரிய உணவுப்பொருட்களான கருப்பு கவுனி அரிசி, மூங்கில் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி மூலம் நான் தயார் செய்து பிஸ்கட்களை கண்டு அதன் சுவையில் மயங்கி என்னை பாராட்டினர்.
புதுகோட்டை மாவட்ட கலெக்டர் மாண்புமிகு. கணேசன் அவர்கள் எங்கள் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். DIC நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் திருமதி. திரிபுர சுந்தரி அவர்கள் எங்கள் விண்ணப்பத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு 25% மானிய சலுகை வழங்கியது எங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அக்டோபர் 2018ல் காஞ்சிபுரம், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். தொழில் நுட்பக்கல்லூரியில் நடந்த புதிய தலைமுறை அறக்கட்டளையின் சுயதொழில் கண்காட்சி கருத்தரங்கில் ஸ்டால் மூலம் பங்கேற்றோம். இக்கண்காட்சியின் மூலம் பல்வேறு நிறுவனங்களின் தொடர்பு ஏற்பட்டது.
தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கையில் அடுத்தடுத்து எங்கள் வீட்டுக்கு அருகே ஏற்பட்ட தீவிபத்து, கஜா புயல் போன்றவற்றால் எங்கள் தொழிற்சாலையில், உணவகம், இயந்திரங்கள் போன்றவை சேதமடைந்து கிட்டத்தட்ட ரூபாய் 15. இலட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இக்கட்டான சூழ்நிலையில் எங்களது விநியோகாஸ்தர்கள் எங்களுக்கு பக்கபலமாக நின்று உதவினர். 2019ல் தொழிற்சாலையை மறுசீரமைப்பு செய்து தொழிலை ஆரம்பித்தோம். தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருவண்ணாமலை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், திருவள்ளூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி என புதுப்புது ஏரியாக்களில் விநியோகஸ்தர்கள் கிடைத்தனர். தற்போது மேற்கு ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சவுத் ஆப்ரிக்கா, பிரிட்டன், துபாய் அமெரிக்கா போன்ற நாடுகளில் எங்களது நண்பர்கள் மூலம் சிறிய அளவில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. எங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஏராளமான முதலீட்டாளர்களை வரவேற்கிறோம். இதன் மூலம் இந்தியாவில் மிகச்சிறந்த அளவில் UZHAVAN’ KUKKY (உழவன்’ஸ் குக்கி) விற்பனையில் சாதனை படைப்போம்.
மேலும் விவரங்களுக்கு யுனிவர்ஸ் புட் பரோடக்ஸ், 256, D.A.V. ரோடு அன்னவாசல், புதுக்கோட்டை – 622 1010, தொடர்பு எண்: 96006 19171, 91599 58559
addrdss. m.silambarasan
22.thiribura sundhari st.
jamin pallavaram.
cell.8508551010
உங்கள் கட்டுரையை படித்தேன். எனக்கும் சிறுதானியங்கள் உணவுப்பொருட்கள் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவல் நெடுநாளாக உள்ளது. உங்கள் ஆலோசனை தேவை….