சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக நிலம், நீர், காற்றுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களுக்கு இப்பொழுதெல்லாம் கிராக்கி அதிகம். அந்த வகையில் வாழை நாரில் உருவாகும் கைப்பைகள், மிதியடி, பாய் போன்றவை பிரபலமாகி வருகின்றன.
ஐ.எஸ்.ஆர்பி எக்ஸ்போ உறுப்பினரான மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகம் ராஜா, அவர்கள் ஜோதி பனானா பைபர் யூனிட் நடத்தி வருகிறர். கொரோனா ஊரடங்கால் ஆர்டர் மற்றும் வேலை இன்றி இருந்தவர், மீண்டும் தொழில் துவங்கி லாபம் ஈட்டுவதுடன் வேலை வாய்ப்புகளும் வழங்கி வருகிறர்.
வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்கள் விரும்பி வாங்குவது வாழைநாரில் தயாரான அழகிய கூடை, மின்விளக்கு ஸ்டாண்ட், மிதியடி குஷன்கள் தான். இவற்றை தயாரித்து பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வருகிறார். அங்கிருந்து இவரது பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. தற்போது 20 பேருக்கு வேலை தரும் ராஜா, விருப்பமுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கவும் தயாராகவும் உள்ளார். அவர் கூறியதாவது.
தோட்டத்து வாழை நார்களை எடுத்து பயிர்சி செய்தேன், வயர் கூடை, பனை ஓலை பொருட்களை மாடலாக வைத்து சிறிது சிறிதாக வாழைநாரில் பொருட்களை தயாரித்தேன். அவற்றை நிறுவனங்களிடம் காண்பித்த போது தங்களுக்கு தேவையான டிசைன்களில் தயாரிக்க அறிவுறுத்தினர். ஆர்டர் இல்லாத பொருட்களுக்கு நானே டிசைன் செய்ய ஆரம்பித்தே. படிப்படியாக முன்னேறி தற்பொழு 30 டிசைன்களில் பொருட்கள் தயாரிக்கிறேன்.
நார் பொருட்களை தயாரிக்க நேந்திரன் வாழை சிறந்த ரகம். ஒட்டு, ரஸ்தாளி, நாளி, பூவன் ரகங்களும் நாருக்கு ஏற்றது. ஒரு மரத்தில் இருந்து 10-15 மட்டைகள் உரிக்கலாம்.
அதை பத்து நாட்கள் வெயிலிலும் 20 நாட்கள் நிழலிலும் காய வைத்து பயன்படுத்த வேண்டும். வாழைநாரில் பொருட்கள் தயாரிக்கும் போது தண்னீரைப் பயன்படுத்த வேண்டும். பொருட்கள் தயாரித்து முடித்தபின், உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தும் திரவத்தால் பூசி விடுகிறோம். இரண்டாண்டுகள் ஆனாலும் வாழை நார் கெடாமல் அப்படியே இருக்கும்.
வேலைவாய்ப்பு பெற விரும்பினால் ஏதாவது ஒரு பொருள் தயாரிக்க எங்கள் யூனிட்டில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். அதை சரியாக செய்து விட்டால் வீட்டுக்கு கொண்டு போய் தயாரிக்க ஆர்டர் தருகிறோம்.
வாரம் ஒருநாள் மொத்தமாக யூனிட்டில் ஒப்படைக்க வேண்டும். இந்த வேலைக்கு கவனமும் பொறுமையும் தேவை என்பதால் பெண்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: டி.இராஜா, உரிமையாளர் , ஜோதி பைபர் யூனிட், மதுரை