பாக்கு மட்டை தட்டு உற்பத்தி அதிக வருமானம் தரும் தொழில்

Home / பாக்கு மட்டை தட்டு உற்பத்தி அதிக வருமானம் தரும் தொழில்

. ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு ரெடி!

 

முதலீடு !

இந்த தொழில் செய்வதற்கு ஆறரை லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். இயந்திரத்திற்கு 4.50 லட்சம் ரூபாயும், செயல்பாட்டு மூலதனத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும் தேவைப்படும். இந்த தொழிலுக்கான இயந்திரங்கள் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கிடைக்கின்றன.

 

மானியம் !

இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 2.28 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மானியத் தொகை யானது இந்த தொழிலுக்கு வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத் திற்குப் பிறகு வரவு வைக்கப்படும்.

 

இயந்திரம் !

ஒரு யூனிட்டுக்கு ஐந்து விதமான இயந்திரங்கள் தேவை. இந்த ஐந்து விதமான இயந்திரத்திலிருந்து 4, 6, 8, 10, 12 இஞ்ச் அளவுகளில் பாக்கு மட்டை பிளேட் தயாரிக்க முடியும். மேனுவல், ஹைட்ராலிக் மற்றும் ஆட்டோமேட்டிக் என இயந்திரங் கள் பலவிதங்களில் இருக்கின்றன. இதில் மேனுவல் இயந்திரம் எனில் 90,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும். ஹைட்ராலிக் இயந்திரம் 1,25,000 ரூபாயும், ஆட்டோமேட்டிக் இயந்திரம் எனில் 2.50 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் வரை ஆகும். ஒரு யூனிட் இயந்திரத்தை கொண்டு ஐந்து விதமான அளவுகளில் பிளேட்டு களைத் தயாரிக்கலாம்.

வேலையாட்கள் !: இந்த தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் ஏழு நபர்கள் வரை வேலைக்கு தேவை. பெரும்பாலும் வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த தொழிலை செய்துவிடலாம்.

 

 

தயாரிக்கப்படும் அளவுகள் ! :12 இஞ்ச் அளவு கொண்ட பிளேட் கல்யாண வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும், 8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள் வழங்குவதற்கும் பயன்படுகின்றன.

சந்தை வாய்ப்பு !

”பாக்கு மரத்திலிருந்து கிடைக்கும் மட்டை, முன்புஎந்தவித பயன்பாட்டிற்கும் தேவைப்படாமல் இருந்தது. ஆனால், இன்றோ மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த தொழிலை சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் குறைந்த பட்ச முதலீடாக இரண்டரை லட்சம் ரூபாயைக் கொண்டு ஆரம்பிக்கலாம். மூலப்பொருள் தவிர வேறு எந்தவிதமான பொருட்களும் தேவைப்படாத தொழில் இது. மின்சாரம் ஒரு ஹெச்.பி. அளவில் தேவைப்படும். 2,500 சதுரடியில் இடம் இருந்தால் போதும். இரண்டு வருடங்களில் பிரேக் ஈவன் அடைந்து விடலாம்.பாக்கு மட்டையை சுத்தம் செய்ய ஆறு  அடி உயரம், அகலம் கொண்ட தண்ணீர்த் தொட்டி தேவை. பெரும்பாலும் உணவு பரிமாறவே இந்த பிளேட்டுகள் பயன்படுத்தப்படுவதால் பூஞ்சை வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். சில இடங்களில் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே இந்த பிளேட்டுகளை விலைக்கு வாங்கிக் கொள்ளவும் செய்கின்றன. நல்ல டிமாண்ட் இருக்கும் தொழில் என்பதால் நம்பி இறங்கலாம்” .

 

குறைந்த முதலீட்டில் அதிகப்படியான வருவாய் கிடைக்கும் என்பதால், சாமானியர் முதல் பட்டதாரிகள் வரை சுய தொழிலாக இதனை செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கால்களால் (அச்சு இயந்திரம் போல) ஒவ்வொர் பாக்கு மட்டை தட்டையும் தயரிக்க வேண்டும். இதனால்  கால நேரம் விரயமாவதுடன், தொழிலாளர்கள் மிகுந்த உடல் சோர்வுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் வேலை வாய்ப்புக்காக இத்தொழிலை ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.