சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பாக்குமட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் உணவு வழங்க, உணவகங்கள், கேட்டரிங், பெரிய நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் வரை அதிக வரவேற்பு உள்ளது. மலிவாகக் கிடைக்கும் பொருள் இன்று விலை மதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்த முறையில் இயங்கிவரும் “எவர் கிரீன் ஏஜென்சீஸ்” (Ever Green Agencies) நிறுவனர் ந. பாவேந்தன் அவர்களை பேட்டிகாணும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பல அறிவார்த்தமான, அனுபவமிக்க செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அவர் பி. எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து அது சார்ந்த வேலையில் அமர்ந்த பின்னர் அதில் சரியாக மனம் ஒட்டவில்லை. காரணம் நாம் மற்றவர்களிடம் வேலை பார்ப்பதைவிட நாம் பல நூறு பேருக்கு வேலை கொடுத்து பயிற்சி கொடுத்து இளம் தொழிலதிபர்களை ஏன் உண்டாக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில் உருவானதுதான் இந்த பாக்குமட்டை சார்ந்த பொருட்கள் செய்யும் நிறுவனம்.
“கொரோனா தொற்று” ஊரடங்கால், பாக்கு மட்டை பொருட்கள் விற்பனை எந்த அளவில் உள்ளது” என்பதற்கு பதில் அளிக்கையில், கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட நல்ல அளவில் விற்பனை கூடி உள்ளது. வேகமான இயந்திரகதி வாழ்கையில் நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, அதை தூக்கி எறிந்து விட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம் இது. சாப்பிட தட்டும் வேண்டும், அது ஒருமுறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும். அதே சமயம் அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைக்காததாக இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை பொருட்கள்.
1999 வரை பாக்கு மட்டையைச் சீண்டுவார் யாருமில்லை எனற நிலை மாறி, இன்று விருந்துகளிலும், கேண்டீன்களிலும் பெரும்பாலும் பாக்குமட்டை தட்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் பிரபல நிறுவனங்களான கிருஷ்ணாஸ்வீட்ஸ், முருகன் இட்லிக்கடை, இன்ஃபோசிஸ், இந்தியா சிமெண்ட்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் கிள்ப் போன்ற நிறுவனங்களுக்குத் தனது உற்பத்தியை நேரடி விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தயாரிப்புகள் அனைத்தும் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நியாயமான விலையில் வழங்கி வருவது பாராட்டத்தக்கது. எங்கள் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ற தரம், புதுமை, சேவை என அனைத்தையும் நிறைவாகத் தருகிறோம். எத்தகைய சூழ்நிலையிலும் தரத்தில் எவ்வித சமரசம் செய்ய நாங்கள் இடம் கொடுப்பதில்லை.
பாக்கு மட்டையை ஆழமாக நேசிக்கும் இவரை “பாக்குமட்டை பாவேந்தன்” என்று நாம் அழைத்தாலும் பொருந்தும். பாவேந்தன் அவர்கள் நமது அறக்கட்டளையுடன் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நமது அறக்கட்டளையுடன் இணைந்து பாக்கு மட்டை தட்டு பயிற்சி முகாம்களை 2014- சென்னயிலும் பிப்ரவரி – 2015 – தேனியிலும், பிப்ரவரி 2016 சேலத்திலும் நடத்தி இருக்கிறோம். மேலும் நமது அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார்.