நீலப்பச்சைப்பாசி (Spirulina) அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோபாக்டீரியா (Cyanobacteria)மனிதர்களாலும், விலங்குகளாலும் உண்ணத்தக்கவையாகும். முதன்மையாக, இரண்டு சயனோபாக்டீரியா இனங்கள் (ஆர்த்ரோஸ்பைரா பிளாட்டென்சிஸ், ஆர்த்ரோஸ்பைரா மேக்சிமா) உணவுக் குறைநிரப்பிகளாகஉபயோகப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது. இவை, உணவுக் குறைநிரப்பிகளாகவும், முழு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீலப்பச்சைப்பாசி மாத்திரைகளாகவும், அவலாகவும், பொடியாகவும் கிடைகின்றது. இவை மீன்வளர்ப்பிலும், மீன் காட்சியகங்கள், கோழிப்பண்ணைகளிலும் தீவனக் குறைநிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றது
இது ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் ஆன நுண்ணிய உடல் அமைப்பு கொண்ட அர்த்ரோஸ்பைரா (Arthrospira) என்ற நீலப்பச்சைப்பாசிவகையைச் சேர்ந்த பாசியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தப் பாசி வகையை வெறும் கண்களால் பார்க்க இயலாது. இது ஓரளவு உப்புமற்றும் காரத் தன்மை உடைய நீரில் வளரக்கூடியது. இதற்கு 1927-ம் ஆண்டு ஒரு செருமனிய அறிவியலாளரால் ஸ்பைருலினா என்று பெயரிடப்பட்டது. ஆனால் இப்பெயருக்கும் ஸ்பைருலினா என்றபேரினத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. உலகம் முழுவதும் இதில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. இது பாசி வகையை சேர்ந்த புராதன உயிரினம். ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனிதஉடலில் உள்ள செல்களால் சுலபமாக உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது.
மற்ற உணவுப் பொருள்களை விட அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்த பாசி உடல் ஆரோக்கியத்தை பெருக்கும் மிக முக்கியமான உணவாகத் திகழ்கிறது. அதனால், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இந்தப் பாசியையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மீன் உணவில்புரதச்சத்து அதிகம் இருப்பதற்கு அவை பாசிகளை முக்கிய உணவாகக் கொள்ளவதே காரணமாகும். இதை உணவாக பயன்படுத்தலாம்.
ஸ்பைருலினா கேப்சூல்: விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக, “ஸ்பைருலினா கேப்சூல்’கள் தான் உட்கொள்கின்றனர். இந்த “ஸ்பைருலினா’ கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென்ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில் ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர். இதில் புரதம் 65%, கொழுப்பு 5%,கார்போஹைட்ரேட் 20% உள்ளது. மேலும், இதில் காமா-லினோலெனிக் அமிலமும் உள்ளது.
