நாப்கின் தயாரிப்பு

தயாரிக்கும் முறை:

வெள்ளை நிற மரக்கூழை, 8 கிராம், 10 கிராம், 12 கிராம் என நாப்கின் தேவைப்படும் எடை அளவுகளில் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் கசியாத பேப்பரின் மேல் தடவிய பசையின் மீது மரக்கூழை வைத்து இறுக்க வேண்டும். அதை மெல்லிய துணியில் சுற்றி, மூட வேண்டும். நீர் கசியாத பேப் பர் அமைந்த
அடிப்பாகத்தின் மேல் இருபுறமும் லேசான பசை தடவிய பேப்பரை ஒட்டினால் நாப்கின் தயார். பேன்டீஸ் அணியாதவர்களுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின் தயாரிக்க, பசை
தடவிய பேப்பரை ஒட்டாமல், சன்னமான ரிப்பனில் பெல்ட் பொருத்த வேண்டும். பிரசவமான பெண்களுக்கு அதிக கிராம் கொண்ட திடமான நாப்கின் தயாரிக்க வேண்டும். அதில் பெல்ட் பொருத்த வேண்டும்.

முதலீடும் லாபமும்:

கட்டமைப்பு இயந்திரங்களுக்கு ரூ1.5 லட்சம். ஒரு மாத உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் மற்றும் உற்பத்திக்கூலி (4 தொழிலாளர்கள்), இட வாடகை, மின்சாரம் உள்பட ரூ50 ஆயிரம். மாதம் 25 நாளில் 25 ஆயிரம் நாப்கின்கள் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் தயாரிக்க அதிகபட்ச செலவு ரூ2. மொத்தமாக விற் பனை செய்யும்போது குறைந்தபட்சம் ஒரு நாப்கினுக்கு 50 காசு முதல் அதிகபட்சம் ரூ1.50 என குறைந்தபட்சம் ரூ12,500 முதல் அதிகபட்சம் ரூ37,500 வரை லாபம் கிடைக்கும். மொத்த ஆர்டர் கிடைத்தால் லாபம் இன்னும் அதிகமாகும்.சுகாதார விழிப்புணர்வு காரணமாக நாப்கின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இத்தொழிலுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அக்கம்பக்கத்தில் உள் ளவர்களுக்கு வாடிக்கையாக விற்க தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும்.

நிரந்தர வருவாய்:

‘நாட்டில் பெண்கள் சுகாதார நலத்தை மேம்படுத்த மத்திய அரசு கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவை யான நாப்கின்களை தனியார் மூலம் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு தொழில்முனைவோர் மூலம் நாப்கின்களை தயாரிக்க ஆலோசித்து வருகிறது.
இத்தொழிலில் ஈடுபட உள்ளவர்களுக்கு நிரந்தர வர்த்தக வாய்ப்பு
உள்ளதால், இத்தொழில் வரும் காலத்தில் செழிக்கும் வாய்ப்புள்ளது’ என்கிறார் ராஜேஸ்வரி.

கட்டமைப்பு தேவைகள்:

நாப்கினுக்கு தேவையான மரக்கூழை பஞ்சு போல் ஆக்கும் டீபைப்ரேஷன் மெஷின்.
நாப்கினில் இடம்பெறும் மரக்கூழின் அளவுகளை எடைபோட எலக்ட்ரானிக் எடை மெஷின்.
தேவைப்படும் நீள, அகலத்தை அமைக்க கோர் டை என்ற உலோக சட்டங்கள் 15.
நீர் கசியாத பேப்பரின் மேல் மரக்கூழ் ஒட்டவும், இறுக்கம் கொடுக்கவும் தேவையான கோர் ஃபார்மிங் மெஷின்.
தயாரான நாப்கினை சுத்தம் செய்ய அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் டிரே. பேக்கிங் செய்ய சீலிங் மெஷின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *