காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு

சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.
காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.

சந்தை வாய்ப்பு!

காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என  பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப் படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது.பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. தவிர, காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழி லுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.

உற்பத்தி முறை

தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய வேண்டும் எனில், அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதாவது, சிறந்த மூலப்பொருள் மற்றும் சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசிய தேவைகள் ஆகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிப்பி காளான் தயாரிக்க வைக் கோலை அதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு அதனை 50% காய வைத்து பாலித்தீன் கவரில் போட வேண்டும். இதே கவருக்குள் காளான் விதையையும் போட்டு கட்டி தொங்கவிட வேண்டும். 300 கிராம் எடை கொண்ட காளான் விதைக்கு நான்கு கிலோ வைக்கோல் போட வேண்டும். இது ஒரு பாலித்தீன் பைக்கான அளவு.

இதற்கென பிரத்யேகமாக  550 சதுர அடிக்குள் தென்னை ஓலையால் குடிசைக் கட்ட  வேண்டும்.  கீழே தரையில் ஆற்று மணலைப் பரப்பி அதில் தண்ணீர் ஊற்றி வரவேண்டும். இந்த சூழ்நிலை காளான் வளர்ப்பிற்கு ஏற்ற தட்டவெப்ப நிலையைக் கொடுக்கும். விதைகள் போட்டிருக்கும் பாலிதீன் பைகளில் 20 ஓட்டை போட வேண்டும்.இந்நிலையில் 30-35 நாட்களுக்குப் பிறகு சிப்பி காளான் வெளியில் வர தொடங்கும். காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். முளைத்திருக்கும் காளானை மாலையில் அறுவடை செய்தால் மறுநாள் காலையில் பயன் பாட்டிற்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். காளான்களை அறுவடை செய்ததும் உடனடியாக சப்ளை செய்துவிட வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

நிலம் மற்றும் கட்டடம்

10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 700 சதுர அடி நிலம் தேவைப்படும். நிலத்தில் குடிசை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இயந்திரம்
ஒரு நாளைக்கு 350 கிலோ வீதம் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால் 105 டன் காளான் தயாரிக்க முடியும். வைக்கோலை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரமான ஆட்டோகிளேவ் சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது.

தண்ணீர்

தினமும் 15 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும்படி இருக்க வேண்டும்.

ஃபைனான்ஸ்

இந்த உற்பத்தி திறனுக்கான நிலத்திற்கு 60,000 ரூபாய் (தேர்ந்தெடுக்கப்படும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும்), கட்டடம் 2,50,000 ரூபாய் என மொத்தம் 3,10,000 ரூபாய் தேவை. இயந்திரத்திற்கான செலவு 1.98 லட்சம் ரூபாய்.

ரிஸ்க்

காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். காரணம், அசுத்தமான கையுடன் வேலை செய்தால்கூட பாக்டீரியாவால் பாதிப்படைந்து காளான் ஒழுங்காக வளராமல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஒரு பாலித்தீன் கவர் கெட்டு போனால்கூட அனைத்து பாலித்தீன் கவரும் கெட்டுப் போய்விடும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும், எனவே குறைந்த அளவே காளான் உற்பத்தியாகும். இதனை சரி செய்ய மற்ற நேரங்களில் காலை, மாலை மட்டும் தெளிக்கும் தண்ணீரை வெயில் நேரங்களில் நாள் முழுவதும் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை விட்டு வந்தால் காளான் வளரத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். பனிக் காலத்திலும் காளான் வளர்வது குறையும்.

பிளஸ்

அசைவ உணவுகளுக்கு மாற்றாக மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளானைப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில் காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.நல்ல ஏற்றுமதி வாய்ப்பு உள்ள இத்தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வாய்ப் புள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையில் காளான் உற்பத்தி யூனிட்டுகள் இல்லாத தால் இத்தொழிலுக்கு பிரகாச மான எதிர்காலம் இருப்பதை மறுக்க முடியாது.

தேவையானவை:

10 கிலோ வைக்கோல், 12க்கு 24 இன்ச் அளவுள்ள ஹெச்.எம் பாலிதீன் கவர்கள், திசு வளர்ப்பு முறையில் பெறப்பட்ட காளான் விதை – 175 கிராம், கார்பன்டைசின் பவுடர் – 10 கிராம், ஃபார்மலின் – 125 மி.லி., நைலான் ரப்பர் பேண்ட்கள், நைலான் கயிறு.
காளான் விதைகள், காளான் பண்ணைகள்ல கிடைக்கும். சென்னை, கோவை மாதிரியான நகரங்கள்ல காளான் பண்ணைகள் இருக்கு. கெமிக்கல் பொருட்களையும் அங்கயே வாங்கிக்கலாம். ரப்பர் பேண்ட், நைலான் கயிறு, பாலிதீன் பைகளை மொத்த விலை கடைகள்ல வாங்கலாம்.

சாகுபடி செய்யும் முறை:

முதல்ல 100 லிட்டர் தண்ணியில கார்பன்டைசின் பவுடர் 10 கிராம், ஃபார்மலின் 125 மி.லி-ங்கிற அளவுல ஊத்திக்கணும். இதுல வைக்கோலை நனைச்சு, பத்துலருந்து 12 மணி நேரம் ஊற வைக்கணும். இப்படி ஊற வைக்கறதால வைக்கோல்ல இருக்கற பூஞ்சைகள், நுண்கிருமிகள் அழிஞ்சிடும். இந்த வைக்கோலை காட்டன் துணி.. இல்லேன்னா, சாக்குல பரப்பி, ஈரம் இல்லாத அளவுல நிழல்ல உலர்த்தணும்.

பாலிதீன் பையோட அடி முனையை நைலான் ரப்பர் பேண்டால இறுக்கமா முடிச்சுப் போட்டா, சிலிண்டர் வடிவம் கிடைக்கும். அதுல ரெண்டு கையளவு வைக்கோலைத் திணிச்சு, ஒவ்வொரு அடுக்கோட ஓரத்துலயும் நடுவுலயும் கைப்பிடி அளவு காளான் விதையைத் தூவணும்.

இதே மாதிரி அஞ்சு அடுக்கா வைக்கோலை வெச்சு, விதைகளைத் தூவணும். கடைசியா காளான் விதை களை தூவி, பையோட மேல் நுனியை நைலான் ரப்பரால காத்துப் புகாத மாதிரி இறுக்கமாக் கட்டணும். இந்தப் பைகளை ‘பெட்’னு சொல்லுவோம்.
இப்ப, இந்த கவரைச் சுத்திலும் பால்பாயின்ட் பேனாவோட முனையால எட்டுலருந்து பத்துத் துளைகள் வரை போட்டுக்கணும். இந்தத் துளைகள் வழியாத்தான் காளான் மொட்டுக்கள் வெளியே வரும்.

இந்தப் பைகளை ஒரு ரூம்ல நைலான் கயிறுகள்ல கட்டித் தொங்க விடணும் (பார்க்க : படம்). குறைந்த பட்சம் 150 சதுர அடியாவது இருக்கணும் அந்த ரூம். தளத்தோட உயரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு கயித்துல 5 (அ) 6 ‘பெட்’களை கட்டி விடலாம்..” என்கிறவர், தன் வீட்டு மொட்டை மாடியிலேயே கூரை வேய்ந்து, அதைக் காளான் வளருவதற்கேற்ற அறையாக மாற்றியிருக்கிறார்.

”காளான் குறைஞ்ச வெப்ப நிலையிலதான் வள ரும். அதனால, இந்தப் பைகள் இருக்குற ரூமைச் சுத்தி கோணிப்பைகளை கட்டி வைக்கணும். கோணிப்பைகள் மேல, தினமும் காலையில தண்ணி தெளிக்கணும். இத னால, ரூமோட வெப்பநிலை 10லருந்து 15 டிகிரி செல்ஷியஸ்க்குள்ள இருக்கற மாதிரி பார்த்துக்கலாம்..” என்கிறவரின் அறையில் ஒரு தெர்மாமீட்டர் தொங்குவதைக் காண முடிந்தது.

”ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, பைகளை தொங்க விடுற தேதியைக் குறிச்சு வைக்கிறது! தினமும் சரியான வெப்பநிலை இருக்குற மாதிரி பார்த்துக்கிட்டா போதும்.. பதினஞ்சாவது நாள் துளைகள் வழியா காளான் மொட்டுக்கள் வெளிப்பட்டுடும். அதுக்குப் பிறகு அப்பப்ப, ஸ்ப்ரே பாட்டில்ல தண்ணியை விட்டு, மொட்டுக்கள் மேல தெளிக்கணும்.

23-வது நாள்ல காளான் நல்லா முத்திடும். அப்ப ஒரு பையிலருந்து 400 கிராம் முதல் 600 கிராம் காளானை அறுவடை செய்யலாம். இப்ப, வேற இடங்கள்ல துளை போடணும். 26-வது நாள்ல திரும்பவும் 300 கிராம் முதல் 450 கிராம் காளானை அறுவடை செய்யலாம். இதே மாதிரி மொத்தம் அஞ்சு முறை துளைகள் போட்டு காளானை அறுவடை செய்ய முடியும்.

அறுவடை செய்யப்பட்ட காளான்களை ஒரு நாள் மட்டும்தான் வெளியில வைக்கலாம். ஃப்ரிட்ஜ்லன்னா ரெண்டு நாள் வரை வைக்கலாம். இல்லேன்னா, கெட்டுப் போய்டும்” என்று தெளிவாக விளக்கியவர், மார்க்கெட்டிங் பற்றியும் சொன்னார்.

”ஓட்டல்கள்ல ஒரு கிலோ காளான் 75 ருபாய்னு வாங்கிக்கறாங்க. அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு 200 கிராம் பாக்கெட்டை 15 ரூபாய்க்கும், மத்தவங்களுக்கு 20 ரூபாய்க்கும் கொடுக்கிறேன். இந்தக் காளான் வளர்ப்புல செலவு குறைவு, வரவு அதிகம்” என்றவர், அதுபற்றியும் சொன்னார்..

”மாடியில கூரை போடுறதுக்கு எட்டாயிரம் ரூபாய் செலவாச்சு. ஒரு கோணி 15 ரூபா. இது ரெண்டும் ஒரு தடவை மட்டும் பண்ற முதலீடு. மத்தபடி ஒரு கிலோ பாலிதீன் கவர் – 95 ரூபா, 175 கிராம் காளான் விதைப் – 15 ரூபா (இந்த 175 கிராம் விதையை ஒரு பெட்டுக்குப் போட முடியும்), கார்பன்டைசின் பவுடர் 1/2 கிலோ – 310 ரூபா, ஃபார்மலின் 1 லிட்டர் – 25 ரூபா.. இது மட்டும்தான் செலவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *