புதிய தலைமுறை அறக்கட்டளையின் சுயதொழில் மன்றத்தின் மூலம் ஏற்று& இறக்குமதி – நடைமுறைகளும் & ஆவணமாக்கலும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாமினை சென்னை, வடபழனியில் உள்ள SRM பல்கலைகழகத்தில் மே 29, 2016 அன்றுநடத்தியது.
நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெற்றது. இதில் தொடக்கமாக புதிய தலைமுறை அறக்கட்டளையின் செயலாளர் திரு.து.வே.வேங்கடகிரி சுயதொழில் மன்றத்தின் செயல்பாடுகள், இதுவரை நடத்தியுள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் சுயதொழில் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் சிறு & குறு தொழில் நிறுவனத்தின் மூலம் கடந்த 10வருடங்களாக ஏற்றுமதி & இறக்குமதி குறித்த பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்களை நடத்தி வரும் திரு. எஸ். சிவராமன், Consultant & Trainer (Foreign Trade Policy & Custom Clearance), Chennai நிகழ்ச்சியில் சிறப்பு வருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை நடத்தினார்.
இந்த முகாமில் ஏற்றுமதி & இறக்குமதி தொழில் குறித்த அடிப்படை IE Code பெறும் வழிமுறைகள், விற்பனை வரி TIN No / VAT No பெறும் வழிமுறைகள், இறக்குமதியாளரை அடையாளம் காணும் வழிமுறைகள், பொருளுக்கு பணம் பெறும் வழிமுறைகள், ஏற்றுமதிக்கான பொருளை தேர்வு செய்யும் வழிமுறைகள், ஏற்றுமதி சந்தை, ஏற்றுமதிக்கான ஆணைகளை பெறும்
வழிமுறைகள், நிறுவனத்தை பதிவு செய்யும் வழிமுறைகள், ஏற்றுமதி ஆணைக்கான லைசென்ஸ் கடன் / வசதி குறித்த விவரங்கள், ஏற்றுமதிக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட சுயதொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.