நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக காலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கும் உண்டு. அந்த வகையில் அரசாங்கத்தால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஊக்குவிக்கப்படுகிறது.
உலகச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 சதவீதமாக உயரலாம் என்கின்ற புள்ளிவிவரங்கள். இப்படியான ஏற்றுமதி தொழில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
முதலில் நாம் கவனிக்க வேண்டியது எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவையாக இருக்கிறது என்பதைத் தான். ஆர்டர்களுக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டாலும், இந்த விவரம் நம்மிடம் இருக்க வேண்டும். சிறிய அளவில் ஆர்டர்கள் எடுத்து அது சரியாக அனுப்பிவைத்து அனுபவம் பெற்ற பிறகு பெரிய ஆர்டர்களை எடுக்கலாம்.
ஏற்றுமதி பொருட்களுக்கு தரம்தான் முக்கியம். இதற்கு ஏற்ப தர அளவுகோல்களை கடைபிடிக்க வேண்டும். இதில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் பொருட்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள். இது மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தும். தரமும், பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் இந்த தொழிலுக்கு முக்கியம்.
எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவை என்பதை ஏற்றுமதி முகவர் அமைப்புகளே கொடுத்து உதவுகின்றன. ஏற்றுமதி இறக்குமதியாளர் லைசென்ஸ் வாங்கிவிட்டால் இந்த தொழிலில் இறங்கிவிடலாம். ஏற்றுமதி செய்ய உள்ள பொருளை முடிவு செய்த பிறகு அதற்கான மேம்பாட்டுக் குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏற்றுமதி சலுகைகள் மற்றும் பிற உதவிகளையும் இவர்கள் மூலமாகக் பெற்றுக் கொள்ளலாம்.
எந்த பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்
அரசு தடை செய்துள்ள பொருட்களைத் தவிர வேறு எந்த பொருட் களையும் ஏற்றுமதி செய்யலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களுக்கு வெளி நாடுகளில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், கைவினைப் பொருட்கள் என அனைத்தையும் ஏற்றுமதி செய்யலாம். வீடுகளில் தோட்டம் அமைப்பதற்காக தேங்காய் மட்டை நார்கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிறுவனத்தை தொடங்குவது எப்படி
தனிநபராக ஏற்றுமதி செய்ய முடியாது. நிறுவனமாக பதிவு கொண் டால்தான் ஏற்றுமதியாளருக்கான லைசென்ஸ் கிடைக்கும்.எனவே முதல் வேலை நிறுவனத்தை பதிவு செய்வதுதான். நாம் என்ன தொழிலில் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதாவது பொருட்களை பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது, பொருட்களை நாமே உற்பத்தி செய்வது, பிறரிடமிருந்து வாங்கி மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வது இதில் எந்த வகையில் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை முடிவு செய்து கொண்டு நிறுவனத்திற்கு பொருத்தமான பெயரை வைக்கலாம்.
நிறுவனப் பெயர்
நமது விருப்பதிற்கு ஏற்ப பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றாலும், இறக்குமதியாளர்கள் புரிந்து கொள் ளும்படி எளிமையாகவும், சர்வதேச தொழில் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக நிறுவனத்தின் பெயர் Exports, International , Overseas என்று முடியுமாறு இருக்க வேண்டும்.
லைசென்ஸ்( IE CODE)
கம்பெனிக்கு பெயரை முடிவு செய்த பிறகு இமெயில் ஐடி, விசிட்டிங் கார்டு, லேட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்புகள், போன்றவை தயாராக வேண்டும். நிறுவனத்தை பதிவு செய்வதற்கு இது அவசியம். மேலும் வங்கிக் கணக்கு தொடங்க லைசென்ஸ் (IE Code) அவசியம். இவை தயாரான பிறகு மத்திய அரசின் தொழில் வணிகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வாணிகத்திற்கான இயக்குநரகத்தில் பதிவு செய்து லைசன்ஸ் வாங்க வேண்டும்.
அனுமதி கோரும் இந்த விண்ணப்பத்தில் நிறுவனம் பற்றிய சிறு விவரம் இணைக்க வேண்டும். மேலும் இதற்கான கட்டண வரைவோலை, வங்கி அத்தாட்சி கடிதம் இணைக்க வேண்டும். தவிர, ஏற்றுமதி செய்பவர்களின் இரண்டு புகைப்படங்கள், பான் கார்டு ஜெராக்ஸ் போன்றவை இணைக்க வேண்டும்.
இந்த அனுமதி கிடைத்து, ஏற்று மதிக்கான ஒப்பந்தங்களும் கிடைத்து விட்டால் உங்கள் தொழிலை தொடங்கி விட வேண்டியதுதான். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறாமல் இருந்தால் ஏற்றுமதி தொழில் எப்போதும் லாபம் தரும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழிலின் 17 ரகசிய விவரம்:
Step 1:ஏற்றுமதிக்கான பொருள் மற்றும் இறக்குமதியாலரை அடையாளம் காணுதல்.
Step 2: ஏற்றுமதி நிறுவனத்தை அமைத்தல்.
Step 3: பான் கார்டு எண் பெறுதல்.
Step 4: I.E. Code விண்ணப்பித்து பெறுதல்.
Step 5: உங்கள் பொருளுக்கு பொருத்தமான ஏற்றுமதி வளர்ச்சி கழகத்தில் உறுபினராதல்
Step 6: ஏற்றுமதி பொருளுக்கான விலையை குறிபிடுதல்.
Step 7: தொகை செலுத்துவதற்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல்.
Step 8: ஏற்றுமதி உத்திரவு பெறுதல் / கடனுறுதி கடிதம்.
Step 9: ஏற்றுமதி வங்கியில் கடன் வசதி பெறுதல்.
Step10: காப்பீடு- எல்லா இடர்களையும் காப்பீடு செய்யும் ECGC பாலிசி இறக்குமதியாளரின் நிதி தகுதி போன்றவற்றை உறுதிபடுத்தும்.
Step 11: ஏற்றுமதி பொருளின் தரத்தை சோதிக்கவும். மாதிரியை சேகரிக்கவும், தரத்தை சோதிக்கவும், இறகுமதியாலரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிசோதனை முகவர்களால் சோதனை மேற்கொள்ள பட வேண்டும்.
Step 12: இறக்குமதியாளரின் தேவைக்கு ஏற்ப பொருள்களை பேக் செய்யவேண்டும்.
Step 13: இன்வாய்ஸ், பேய்கிங் லிஸ்ட் தயாரித்து அதனை ஷிப்பிங் ஏஜெண்டுக்கு அனுபவும்.
Step 14: சரக்கினை துறைமுகத்திலுள்ள சுங்கத்துறை கிடங்கிற்கு ஷிப்பிங் ஏஜென்ட் துணையுடன் அனுபவும்.
Step 15: ஷிப்பிங் ஏஜென்டிடம் இருந்து கீழ்க்கண்ட ஆவணங்களை பெற்றுகொள்ளவும்.
1. இன் வாய்ஸ் – 1
2. பேக்கிங் லிஸ்ட் – 1
3. Bill of Lading (B/L) அசல் 3, நகல் 4
4 சர்டிபிகேட் ஆப் ஆர்ஜின் – 3 காபிகள்,
5 ஏற்றுமதிக்கான ஷிப்பிங் பில்
எற்றுமதியாலரின் பிரதி – 1
வங்கி பிரதி -1
6. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் – 1
Step 16: தொகையை வசூலிப்பதற்கான ஆவணங்களை உங்கள் வங்கியில் சமர்ப்பித்து வங்கியிடமிருந்து கப்பலில் சரக்கினை ஏற்றிய பிறகு உதவியினை பெறவும்.
Step17: தேவையான ஆவணங்களை ஏற்றுமதி கழகம் அல்லது முகவரிடம் ஊக்கதொகை, மானியம் பெறுவதற்காக சமர்பிக்கவும்.